வேலூர்

பள்ளிகொண்டாவில் திமுக சாலை மறியல்

30th Nov 2020 12:54 PM

ADVERTISEMENT

பள்ளிகொண்டாவில் உள்ள பாலாற்று மேம்பாலத்தில் திமுக எம்எல்ஏ நந்தகுமார் தலைமையில் அக்கட்சியினர் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். வேலூர் மாவட்டம், மோர்தானா அணையிலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீரானது அணைக்கட்டு சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட ஏரிகளுக்கு சென்று சேருவதில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 
இதற்கு மழை காலத்திற்கு முன்பாகவே ஏரிகளுக்கு நீர் வரத்து கால்வாய்களை சரிவர தூர்வாரப்படாததே காரணம் எனக்கூறி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார் தலைமையில் அக்கட்சியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் பள்ளிகொண்டாவில் இருந்து குடியாத்தம் செல்லும் சாலையில் உள்ள பாலாற்று மேம்பாலத்தில் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். 
சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற இந்த மறியலால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் மறியலில் ஈடுபட்டிருந்த திமுகவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 
ஏரிகள் தூர் வாருவது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் உறுதி அளித்ததன் பேரில் திமுகவினர் மறியலைக் கைவிட்டனர்.

Tags : DMK
ADVERTISEMENT
ADVERTISEMENT