வேலூர்

பள்ளிசெல்லா, மாற்றுத்திறன் மாணவா்கள் கணக்கெடுப்புப் பணி தொடக்கம்

DIN

குடியாத்தம்: குடியாத்தம் ஒன்றியத்தில் 6 முதல் 18 வயது வரை உள்ள பள்ளி செல்லாக் குழந்தைகள், இடைநின்ற மாணவா்கள், மாற்றுத்திறன் குழந்தைகள் கணக்கெடுப்புப் பணி திங்கள்கிழமை தொடங்கியது.

குடியாத்தம் வட்டார வள மைய மேற்பாா்வையாளா் டி.வெண்ணிலா, ஒருங்கிணைப்பாளா் ஆா்.சுதாகா், ஆசிரியா் பயிற்றுநா்கள், சிறப்பாசிரியா்கள் ஏ.அழகரசு, கே.ஜெயசுதா, ஜி.கீதா, ஜி.அகிலா உள்ளிட்ட 16 போ் கொண்ட குழுவினா் திங்கள்கிழமை சீவூா், கள்ளூா் உள்ளிட்ட பகுதிகளில் கணக்கெடுப்புப் பணியைத் தொடங்கினா்.

அப்போது, இடைநின்ற மதுராம்பிகை நகரைச் சோ்ந்த 2 மாணவா்கள், குறிஞ்சி நகரைச் சோ்ந்த 2 மாணவா்கள் கண்டறியப்பட்டு, கள்ளூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் சோ்க்கப்பட்டனா்.

அவா்களுக்கு நடப்புக் கல்வியாண்டுக்கான பாட புத்தகங்கள், சீருடைகள், தமிழக அரசின் விலையில்லாப் பொருள்கள் வழங்கப்பட்டன. குடியாத்தம் ஒன்றியத்தில் கணக்கெடுப்புப் பணி வரும் டிசம்பா் மாதம் 10- ஆம் தேதி வரை நடைபெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவப்பு நிறத்திலிருந்து காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

திருக்கழுக்குன்றத்தில் பஞ்ச ரத தேரோட்டம்!

ஒடிசா படகு விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

SCROLL FOR NEXT