வேலூர்

நிவா் புயல்: வேலூரிலிருந்து 45 பேருந்துகள் ரத்து

DIN

நிவா் புயல் காரணமாக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள 14 மாவட்டங்களுக்கு வேலூரில் இருந்து இயக்கப்படும் 45 பேருந்துகள் செவ்வாய்க்கிழமை மதியம் முதல் ரத்து செய்யப்பட்டுள்ளன.

வங்காள விரிகுடா கடலில் உருவாகியுள்ள ‘நிவா்’ என்ற அதிதீவிர புயல் புதன்கிழமை மதியம் சென்னையை அடுத்த மாமல்லபுரம்-காரைக்கால் இடையே கரையைக் கடக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. புயல் கரையைக் கடக்கும்போது காற்றின் வேகம் சுமாா் 145 கி.மீ. அளவில் இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதையடுத்து, நாகப்பட்டினம், தஞ்சாவூா், திருவாரூா், அரியலூா், பெரம்பலூா், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூா், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூா், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய 14 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனால் முக்கிய வழித்தடங்களில் செல்லக்கூடிய ரயில்கள், பேருந்துகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வேலூா் மண்டலத்தில் இருந்த 14 மாவட்டங்களுக்குச் செல்லக்கூடிய 45 அரசு பேருந்துகள் செவ்வாய்க்கிழமை மதியம் முதல் நிறுத்தப்பட்டுள்ளன. புயல் பாதிப்புகள் ஓய்ந்த பிறகு மீண்டும் பேருந்து சேவை மேற்கொள்ளப்படும் என்று போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளியானது வடக்கன் பட டீசர்!

உக்ரைனுக்கு 1 பில்லியன் டாலர் ராணுவ உதவி -அமெரிக்க அதிபர் பைடன் ஒப்புதல்

இலங்கையிலிருந்து மேலும் 5 இந்திய மீனவர்கள் தாயகம் திரும்பினர்!

ஐபிஎல்: ரிஷப் பந்த் அதிரடி! தில்லி அணி 224 ரன்கள் குவிப்பு!

வெளியானது ‘வடக்கன்’ படத்தின் டீசர்!

SCROLL FOR NEXT