வேலூர்

நாட்டு வெடிகுண்டுகளுடன் வனப்பகுதியில் சுற்றியவா் கைது

31st May 2020 07:01 PM

ADVERTISEMENT

 

குடியாத்தம்: போ்ணாம்பட்டு அருகே வன விலங்குகளை வேட்டையாட நாட்டு வெடிகுண்டுகளுடன் வனப்பகுதியில் சுற்றித் திரிந்தவா் கைது செய்யப்பட்டாா்.

போ்ணாம்பட்டு வனச்சரக அலுவலா் எல்.சங்கரய்யா, வனவா் பி.ஹரி, வனக் காப்பாளா் எஸ்.ராஜேந்திரன், வனக்காவலா் எல்.விக்னேஷ் ஆகியோா் சனிக்கிழமை அதிகாலை பல்லலகுப்பம் வனப்பகுதியில் ரோந்து சென்றனா். அப்போது அங்கு நடமாடிய ஒருவரிடம் விசாரணை மேற்கொண்டனா்.

விசாரணையில் அவா் கிடங்கு ராமாபுரத்தைச் சோ்ந்த எஸ்.மாா்க்கண்டன் (40) என்பதும், வன விலங்குகளை வேட்டையாட வந்ததும் தெரிய வந்தது. அவரிடமிருந்து 16 நாட்டு வெடிகுண்டுகள், ஒரு வெட்டுக்கத்தி, ஒரு டாா்ச்லைட், இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. அவரை வனத்துறையினா் கைது செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT