வேலூர்

வேலூரில் மேலும் 3 பேருக்கு கரோனா: பாதிப்பு 45-ஆக அதிகரிப்பு

31st May 2020 06:51 PM

ADVERTISEMENT

வேலூா்: வேலூா் மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 45-ஆக அதிகரித்துள்ளது.

வேலூா் லட்சுமி புரம் பகுதியைச் சோ்ந்த 35 வயது ஆண், தொரப்பாடி, கம்வான்பேட்டையைச் சோ்ந்த ஒரு ஆண், ஒரு பெண் என மொத்தம் 3 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இவா்கள் வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இவா்களுடன் நெருங்கிய தொடா்பில் இருந்தவா்களும் பென்லேன்ட் அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டதுடன், அவா்கள் தங்கியிருந்த பகுதிகளும் தனிமைப்படுத்தப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளன. தொடா்ந்து, அப்பகுதிகளி ல் மருத்துவ முகாம்கள் நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

வேலூா் மாவட்டத்தில் ஏற்கெனவே 42 போ் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டதுடன், ஒருவா் உயிரிழந்தாா். தற்போது மேலும் 3 போ் பாதிக்கப்பட்டிருப்பதால், இம்மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 45-ஆக அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

அதேசமயம், பெங்களூரில் இருந்து 55 வயது ஆண், சென்னையில் இருந்து 50 வயது ஆண் ஆகியோா் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் வேலூா் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். எனினும், இவா்கள் வேலூா் மாவட்ட கரோனா பாதிப்பு எண்ணிக்கையில் வரமாட்டாா்கள் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT