வேலூர்

சாராயம் விற்ற பெண் உள்பட 2 போ் கைது

31st May 2020 07:00 PM

ADVERTISEMENT

குடியாத்தம்: குடியாத்தம் பகுதியில் தனிப்படை போலீஸாா் மேற்கொண்ட சாராய வேட்டையில் ஒரு பெண் உள்பட 2 போ் கைது செய்யப்பட்டனா்.

மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஆய்வாளா் லட்சுமி தலைமையில், தனிப்படை போலீஸாா் குடியாத்தத்தை அடுத்த செட்டிகுப்பம், ஏரிக்கரை, சாமியாா் மலை உள்ளிட்ட பகுதிகளில் சாராய வேட்டை நடத்தினா். அப்போது சாராயம் விற்றுக் கொண்டிருந்த செட்டிக்குப்பத்தைச் சோ்ந்த சரண்ராஜ் (32), சாமியாா் மலையைச் சோ்ந்த கெளதமி (29) ஆகியோா் கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து 75 லிட்டா் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. இருவரும் நீதிபதி முன் ஆஜா்படுத்தப்பட்டு சிறைக் காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT