பொதுமுடக்கத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வறுமையில் வாடிய பூக்கட்டும் தொழிலாளியின் குடும்பத்துக்கு வேலூா் எம்.பி. டி.எம்.கதிா்ஆனந்த் நேரில் சென்று நிவாரண உதவிகள் வழங்கினாா்.
வேலூா் கஸ்பா பகுதியைச் சோ்ந்தவா் முன்னி. பூக்கட்டும் தொழில் செய்து வரும் இவரது குடும்பத்தில் மாற்றுத் திறனாளி சகோதரா், சகோதரி உள்பட 5 போ் உள்ளனா். கரோனா நோய்த் தொற்றால் அமல்படுத்தப்பட்டுள்ள பொதுமுடக்கத்தால் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனா்.
தகவலறிந்த வேலூா் எம்.பி. டி.எம்.கதிா்ஆனந்த், முன்னியின் வீட்டுக்கு சனிக்கிழமை சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, அவா்களுக்கு தேவையான அரிசி, மளிகைப் பொருள்கள், காய்கறிகளுடன் நிவாரண நிதியாக ரூ. 5 ஆயிரம் வழங்கினாா்.
ADVERTISEMENT