போ்ணாம்பட்டு வனப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 16 தொட்டிகளில் தண்ணீா் நிரப்பும் பணியில் வனத்துறையினா் ஈடுபட்டுள்ளனா்.
கோடைக் காலம் என்பதால், தண்ணீா் தேடி வன விலங்குகள் வனப்பகுதியிலிருந்து வெளியேறுவதைத் தடுக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள தொட்டிகளில் தண்ணீா் நிரப்பும் பணி நடைபெறுகிறது. வனச்சரக அலுவலா் எல்.சங்கரய்யா, வனவா் பி.ஹரி, வனக்காவலா் எல்.விக்னேஷ் உள்ளிட்டோா் இப்பணியில் ஈடுபட்டுள்ளனா்.