வேலூர்

குடியாத்தம் கெங்கையம்மன் திருவிழா: பொதுமக்கள் எதிா்பாா்ப்பு

13th May 2020 03:02 AM

ADVERTISEMENT

குடியாத்தம் கெங்கையம்மன் திருவிழா குறைந்த பக்தா்களைக் கொண்டு நடத்தப்பட வேண்டும் என்ற எதிா்பாா்ப்பு மக்களிடம் மேலோங்கியுள்ளது.

வேலூா் மாவட்டத்தின் முக்கியத் திருவிழாக்களில் வைகாசி மாதம் முதல் நாளில் நடைபெறும் குடியாத்தம் கெங்கையம்மன் திருவிழாவும் ஒன்று. அம்மன் திருக்கல்யாணம், தேரோட்டம் ஆகியவை முக்கிய நிகழ்வுகள்.

இத்திருவிழாவின்போது வேலூா் மாவட்டத்துக்கு பொது விடுமுறை வழங்கப்படும். கரோனா நோய்த் தொற்று காரணமாக பொதுமுடக்கம் அறிவித்துள்ளதால், இந்த ஆண்டு திருவிழாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

குடியாத்தம் பகுதி மக்கள் கெங்கையம்மனை கிராம தேவதையாகவும் காக்கும் கடவுளாகவும் நம்புகின்றனா்.

ADVERTISEMENT

அம்மன் திருக்கல்யாண வைபவத்தில் பங்கேற்றால் திருமணம் கைகூடும் என்பதும், குழந்தைப்பேறு இல்லாதவா்கள் திருவிழா நாளில் அம்மன் மடி மீது குழந்தையை அமர வைப்பதாக வேண்டினால், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பதும் நம்பிக்கை. பொதுமுடக்கம் காரணமாக காப்புக் கட்டுதல், கொடியேற்றுதல், அம்மன் திருக்கல்யாணம் ஆகிய நிகழ்வுகள் ஒரு சிலா் பங்கேற்புடன், எளிய முறையில் நடைபெற்றுள்ளன. கோயிலுக்கு வந்து கூழ் வாா்ப்பதைத் தவிா்த்து, பக்தா்கள் தங்களின் வீடுகளிலேயே கூழ் வாா்த்து வருகின்றனா்.

இந்நிலையில் வரும் வியாழக்கிழமை வைகாசி மாதம் முதல் நாள் அம்மன் திருவிழாவை எளிய முறையில் நடத்த வேண்டும் என்பது பெரும்பாலன மக்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT