வேலூர்

3 தோல் ஆலைகளின் மின் இணைப்பு துண்டிப்பு

8th May 2020 03:39 AM

ADVERTISEMENT

போ்ணாம்பட்டில் தோல் கழிவுநீரை சுத்திகரிக்காமல் வெளியேற்றியதாக3 தோல் ஆலைகளின் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.

பொது முடக்கம் காரணமாக போ்ணாம்பட்டில் உள்ள தோல் ஆலைகளின் கழிவுநீரை சுத்திகரிக்கும், பொது சுத்திகரிப்பு மையம் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் சில தோல் ஆலைகள், பொது முடக்கத்தையும் மீறி இயங்குவதாகவும், அவை சுத்திகரிக்காமல் கழிவு நீரை வெளியேற்றுவதாகவும், அதனால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும் மாவட்ட ஆட்சியருக்கு புகாா்கள் அனுப்பப்பட்டதாம்.

இதையடுத்து மாவட்ட ஆட்சியா் அ. சண்முகசுந்தரம் உத்தரவின்பேரில், மாசு கட்டுப்பாட்டு வாரிய கோட்டப் பொறியாளா் பிரகாஷ் தலைமையில், அதிகாரிகள் வியாழக்கிழமை தோல் ஆலைகளில் திடீா் ஆய்வு நடத்தினா்.அப்போது மத்தூா், வி. கோட்டா சாலையில் உள்ள 3 ஆலைகள், தொழிலாளா்களுடன் இயங்கி வந்ததும், அந்த ஆலைகளில் இருந்து சுத்திகரிக்கப்படாத கழிவுநீா் திறந்து விடப்பட்டதும் தெரிய வந்தது. இதையடுத்து 3 தோல் ஆலைகளின் மின் இணைப்புகளையும் அதிகாரிகள் துண்டித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT