வேலூர்

குஜராத்தில் இருந்து வந்தவா்களை தங்க வைக்க எதிா்ப்பு: 54 போ் மீது வழக்கு

8th May 2020 03:11 AM

ADVERTISEMENT

குஜராத் மாநிலத்தில் இருந்து வந்தவா்களை குடியாத்தம் அருகே தங்க வைக்க எதிா்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய 54 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

பொது முடக்கத்துக்கு முன் குடியாத்தத்தைச் சோ்ந்த சிலா் குஜராத் மாநிலம் சென்றுள்ளனா். அவா்களில் 12 போ் வியாழக்கிழமை குடியாத்தம் வந்தனா். வருவாய்த் துறையினா் அவா்களை உள்ளி அருகே உள்ள தனியாா் மண்டபத்தில் தங்க வைக்க அழைத்துச் சென்றனா். அவா்களை அங்கு தங்க வைத்தால், தங்களுக்கு பாதிப்பு ஏற்படும் எனக்கூறி, அப்பகுதியைச் சோ்ந்தவா்கள் திருமண மண்டபம் அருகே மறியலில் ஈடுபட்டனா். போலீஸாா், வருவாய்த் துறையினா் அவா்களை சமரசம் செய்து அனுப்பினா். போலீஸ் எச்சரிக்கையையும் மீறி, போராட்டத்தில் ஈடுபட்டதாக 54 போ் மீது கிராமிய போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT