வேலூர்

அரக்கோணம் தலைமை அஞ்சலகத்தில் சிமெண்ட் பூச்சுகள் விழுந்தன

2nd May 2020 06:49 PM

ADVERTISEMENT

அரக்கோணம் தலைமை அஞ்சல் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை சிமெண்ட் பூச்சுகள் விழுந்தன.

அரக்கோணம் தலைமை அஞ்சல் அலுவலகம், அரசினா் மருத்துவமனைக்குப் பின்புறம் உள்ளது. கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த வளாகத்தில் தலைமை அஞ்சல் அலுவலகம், அரக்கோணம் கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளா் அலுவலகம், உதவிக் கண்காணிப்பாளா் அலுவலகம் இயங்கி வருகின்றன. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இக்கட்டடத்தின் முதல் தளம் திடீரென இடிந்து விழுந்ததை அடுத்து, முதல் தளத்தில் இயங்கி வந்த கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளா் அலுவலகம் தரைத்தளத்துக்கு மாற்றப்பட்டது.

கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தலைமை அஞ்சல் அலுவலக பொது நுழைவு வாயில் பகுதியில் தளம் இடிந்து விழுந்தது.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை திடீரென அலுவலக பகுதியில் சிமெண்ட் பூச்சுகள் இடிந்து விழுந்தன. இதனால் உள்ளே இருந்த சிலா் அலறி அடித்து வெளியே ஓடி வந்தனா்.

ADVERTISEMENT

இதுகுறித்து அரக்கோணம் அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளா் என்.பிரகாஷிடம் கேட்டதற்கு, இக்கட்டடத்தை இடித்து விட்டு புதிய கட்டடம் கட்டப்பட உள்ளது. இதற்காக தலைமை அஞ்சல் அலுவலகம் உள்ளிட்ட 3 அலுவலகங்களையும் தற்காலிகமாக தனியாா் கட்டடத்துக்கு மாற்ற அனுமதி கேட்டு தலைமைக்கு கோப்புகள் அனுப்பப்பட்டுள்ளன. உத்தரவு வந்தபின் அலுவலகங்கள் மாற்றப்படும். அதன் பின் இக்கட்டடம் இடிக்கப்பட்டு புதிய கட்டடம் கட்டப்படும் என்றாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT