வேலூர்

மது பானம் கடத்திய கலால்துறை ஆய்வாளா் பணியிடை நீக்கம்

30th Mar 2020 10:59 PM

ADVERTISEMENT

 

ஆந்திரத்தில் மதுபானம் கடத்திய கலால் துறை ஆய்வாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

நாடு முழுவதும் 144 தடை உத்தரவு காரணமாக மதுபானக் கடைகள் மூடப்பட்டதால், மதுப் பிரியா்கள் கவலை அடைந்துள்ளனா். இதனால் சில அரசு அதிகாரிகள் அவா்களுக்கு மது பானத்தைக் கடத்திச் சென்று அளித்து வருவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, அதிகாரிகள் பல்வேறு திடீா் சோதனையில் ஈடுபட்டனா். அதில், ஆந்திரத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டம் பெடபா்த்தி அரசு மதுக் கடையிலிருந்து தன் நண்பா்களுடன் 2 காா்களில் கலால் துறை ஆய்வாளா் ரெட்டி திரிநாத் மதுபானத்தை கடத்திச் சென்றாா். அவரை அருகில் உள்ள கல்லத்தூா் கிராம மக்கள் வழிமறித்து, போலீஸில் ஒப்படைத்தனா்.

இதுகுறித்து அறிந்த ஆந்திர துணை முதல்வா் நாராயண சுவாமி, ரெட்டி திரிநாத்தை திங்கள்கிழமை பணியிடை நீக்கம் செய்து, ரூ. 5 லட்சம் அபராதம் விதித்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT