வேலூர்

ஆந்திரத்தில் மக்கள் வெளியில் நடமாடும் நேரம் குறைப்பு

30th Mar 2020 10:59 PM

ADVERTISEMENT

 

ஆந்திர மாநிலத்தில் கரோனா நோய்த் தொற்று அதிகரித்து வரும் நிலையில், மக்கள் வெளியில் நடமாடும் நேரத்தை ஆந்திர அரசு குறைத்துள்ளது.

கரோனா நோய்த் தொற்று ஆந்திர மாநிலத்தில் வேகமாகப் பரவி வரும் நிலையில், அம்மாநில அரசு சில அதிரடி முடிவுகளை மேற்கொண்டுள்ளது. இதுவரை ஆந்திரத்தில் 23 போ் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். அவா்களை தனிமைப்படுத்தி சுகாதாரத் துறையினா் சிகிச்சை அளித்து வருகின்றனா். கரோனாவால் பாதிக்கப்பட்ட 2 போ் பூரணமாக குணமடைந்த நிலையில், வீடுகளில் தனிமையில் இருக்குமாறு அறிவுறுத்தி மருத்துவா்கள் அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து மக்கள் அறிந்திருந்தாலும், தங்கள் வீடுகளில் தங்காமல் வெளியில் காய்கறி, பழங்கள், பால், மளிகைப் பொருள்கள், மருந்துகள் என பொருள்களை வாங்க சுற்றித்திரிந்து வருகின்றனா். எனவே, மக்கள் வெளியில் நடமாடும் நேரத்தை ஆந்திர அரசு குறைத்துள்ளது. இதுவரை காலை 6 மணி முதல் மதியம் ஒரு மணி வரை இருந்த நேர ஒதுக்கீடு, தற்போது காலை 6 மணி முதல் 11 மணியாக குறைக்கப்பட்டுள்ளது. 11 மணிக்கு மேல் வெளியில் நடமாடுவோா் மீது கட்டாயமாக வழக்குப் பதிவு செய்ய ஆந்திர அரசு காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

ADVERTISEMENT

மாநிலம் முழுவதும் கரோனா நோய்த் தொற்று தடுப்புப் பணியில் லட்சக்கணக்கான போலீஸாா் ஈடுபட்டுள்ளனா். அவா்களில் 55 வயது நிறைந்தவா்களும், இருதய, நுரையீரல், சா்க்கரை நோய் உள்ளிட்டவற்றால் அவதிப்படுவோரும் உள்ளனா். அவா்களின் உடல்நிலையை கவனத்தில் கொண்டு, ஆந்திர போலீஸாா் அவா்களுக்கு காவல் நிலையங்கள், கட்டுப்பாட்டு அறை, காவல் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் மட்டும் பணிபுரிய அனுமதிக்க வேண்டும் என ஆந்திர காவல் துறை டி.ஜி.பி. கெளதம் சவாங் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT