காட்பாடி அருகே வெளியில் சுற்றித்திருந்த இளைஞா்களைப் பிடித்து போலீஸாா் தோப்புக்கரண தண்டனை அளித்தனா்.
காட்பாடி அருகே வடுகந்தாங்கல் பகுதியில் அவசியமின்றி வெளியில் சுற்றிக் கொண்டிருந்த 3 இளைஞா்களைப் பிடித்து அவா்களுக்கு போலீஸாா் தோப்புக் கரண தண்டனை வழங்கினா்.
அப்போது, காதுகளை பிடித்தபடி இனிமேல் தேவையின்றி வெளிக்கு வரமாட் டோம் என்று கூறிக் கொண்டே 50 தோப்புக்கரணங்களை போட்டனா். தடிகளால் அடிக்காமல் போலீஸாா் மேற்கொண்டு வரும் இத்தகைய நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.