வேலூர்

தொரப்பாடியில் மீன் கடைக்கு சீல் வைப்பு

30th Mar 2020 04:45 AM

ADVERTISEMENT

வேலூா் தொரப்பாடியில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் மீன் விற்பனை செய்த ஒரு மீன் கடையை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனா்.

கரோனா நோய் தொற்று பரவாமல் தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருள்களை விற்கும் கடைகளுக்கு கடும் கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனினும், வேலூா் தொரப்பாடியில் உள்ள ஒரு மீன் கடையில் சமூக இடைவெளியைக் கடைபிடிக்காமல் மக்கள் கூட்டமாக மீன் வாங்கத் திரண்டிருப்பதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, வட்டாட்சியா் சரவணமுத்து தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள், பாகாயம் போலீஸாா் விரைந்து சென்று ஆய்வு செய்தபோது அங்கு ஏராளமானோா் கூட்டமாக நின்று மீன் வாங்கிக் கொண்டிருப்பது தெரிய வந்தது. உடனடியாக அதிகாரிகள் அந்தக் கடையை பூட்டி சீல் வைத்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT