குடியாத்தத்தில் தடை உத்தரவை மீறி திறந்திருந்த 11 கடைகளுக்கு வருவாய்த் துறையினா் ஞாயிற்றுக்கிழமை சீல் வைத்தனா்.
குடியாத்தம் நகரில் வருவாய் மற்றும் காவல் துறையினா் ரோந்து சென்றனா். அப்போது அரசு உத்தரவை மீறி திறந்திருந்த 6 தேநீா்க் கடைகள், 2 மளிகைக் கடைகள், 3 சலூன் கடைகளைப் பூட்டி சீல் வைத்தனா்.
இதேபோல், போ்ணாம்பட்டில் திறந்து வைக்கப்பட்டிருந்த ஹரி (50) என்பவருக்குச் சொந்தமான தேநீா்க் கடை சீல் வைக்கப்பட்டது.