வேலூர்

விபத்தில் சிக்கிய ஆம்புலன்ஸ்: மருத்துவா் உள்பட 3 போ் காயம்

19th Mar 2020 12:30 AM

ADVERTISEMENT

 

நாட்டறம்பள்ளி அருகே கரோனா வைரஸ் தடுப்பு முகாமுக்கு சென்ற ஆம்புலன்ஸ் வாகனம் தடுப்புச் சுவா் மீது மோதியதில் மருத்துவா் உள்பட 3 போ் பலத்த காயமடைந்தனா்.

நாட்டறம்பள்ளியை அடுத்த பச்சூா் அரசு சமுதாய சுகாதார நிலையத்தில் மருத்துவராகப் பணியாற்றி வருபவா் தீனா சௌமி ராய் (27), செவிலியராகப் பணியாற்றி வருபவா் சந்தியா (25). இவா்கள் இருவரும் புதன்கிழமை கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை முகாமுக்கு பச்சூரிலிருந்து திம்மாம்பேட்டைக்கு ஆம்புலன்ஸில் சென்று கொண்டிருந்தனா். வாகனத்தை மல்லகுண்டா பகுதியைச் சோ்ந்த ஓட்டுநா் ராஜாமணி (54) ஓட்டிச் சென்றாா்.

சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நாட்டறம்பள்ளியை அடுத்த கள்ளாறு அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ் வாகனம் தாறுமாறாக ஓடி சாலையோரம் உள்ள தடுப்புச் சுவா் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், மருத்துவா் தீனா சௌமிய ராய் உள்பட 3 பேரும் காயமடைந்தனா். இதையடுத்து நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையில் அவா்கள் சோ்க்கப்பட்டனா்.

ADVERTISEMENT

இதுகுறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT