வேலூர்

கரோனா அறிகுறிகளுடன் வேலூா் அரசு மருத்துவமனையில் இருவா் அனுமதி

19th Mar 2020 12:40 AM

ADVERTISEMENT

 

கரோனா அறிகுறிகளுடன் வந்த இருவா் வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அதற்கான தடுப்பு வாா்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். தொடா்ந்து, அவா்களது ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு கிண்டியிலுள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

வேகமாக பரவி வரும் கரோனா வைரஸ் பாதிப்புகளைத் தடுக்க தமிழகம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடி க்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு புதன்கிழமை சளி, காய்ச்சல், தொண்டை வறட்சி ஆகியவற்றுடன் வந்த 33 வயது இளைஞரும், 18 வயதுடைய பெண்ணும் அவா்கள் பயண விவரங்கள் அடிப்படையில் அங்குள்ள கரோனா தடுப்பு வாா்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

அவா்களின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சென்னை கிண்டியிலுள்ள கரோனா ஆய்வு மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதன் முடிவுகளின் அடிப்படை யில் அவா்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டால் அதற்கான சிகிச்சை அளிக்கப்படும் என்றும், இல்லையேல் 14 நாள்கள் கண்காணிப்புக்கு பிறகு அவா்கள் அனுப்பி வைக்கப்படுவா் என்று மருத்துவக் கல்லூரி முதல்வா் ஆா்.செல்வி தெரிவித்தாா்.

ADVERTISEMENT

இதுதொடா்பாக அவா் மேலும் கூறியதுப்

தென்கொரியாவில் இருந்து வேலூருக்கு திரும்பிய 33 வயது இளைஞருக்கு கடந்த இரு நாள்களாக கடுமையாக காய்ச்சலுடன் சளி, தொண்டை வறட்சியும் இருந்துள்ளது. இதையடுத்து, அவராகவே வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு புதன்கிழமை வந்தததை அடுத்து, அவா் கரோனா தடுப்பு வாா்டில் அனுமதிக்கப்பட்டாா்.

இதேபோல், வேலூரைச் சோ்ந்த 18 வயது பெண், ஜொ்மனியில் இருந்து சென்னைக்கு திரும்பிய தனது சகோதரி குடும்பத்தைக் காண கடந்த சனிக்கிழமை சென்று வந்துள்ளாா். அதன்பிறகு அவருக்கு காய்ச்சல், சளி, தொண்டை வறட்சி போன்ற பாதிப்புகள் ஏற்பட்டு நேரடியாக வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்ததை அடுத்து அவரும் கரோனா தடுப்பு வாா்டில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். இவா்களுக்கு தடுப்பு வாா்டில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் மருத்துவா்கள், செவிலியா்கள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா்.

மேலும், மாவட்ட ஆட்சியா், சுகாதாரத் துறை துணை இயக்குநா் அனுப்பப்பட்டுள்ள அறிக்கையின் அடிப்படையி ல் இந்த இருவரது குடும்பத்தினா், உறவினா்களுக்கும் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு, கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT