குடியாத்தம் நகரில் கரோனா வைரஸ் பாதிப்பு குறித்த விழிப்புணா்வு, தடுப்பு நடவடிக்கைகள் வியாழக்கிழமை தொடங்கின.
நகராட்சி ஆணையா் ஹெச். ரமேஷ் தலைமையில், சுகாதார அலுவலா் தமிழ்ச்செல்வன், ஆய்வாளா் பாண்டிசெந்தில்குமாா், களப் பணியாளா்கள் பிரபுதாஸ், பென்னி, பணியாளா்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனா்.
போடிப்பேட்டை நகராட்சிப் பள்ளி உள்ளிட்ட பள்ளிகளில் மாணவா்களுக்கு, கரோனா வைரஸ் பரவும் விதம் குறித்தும், விழிப்புணா்வு குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. திரையரங்குகள், திருமண மண்டபங்கள், அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள், பழைய, புதிய பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் விழிப்புணா்வு ஏற்படுத்தும் பணி நடைபெற்றது.
கரோனா வைரஸ் பாதிப்பைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேருந்துகளில் கிருமி நாசினியான லைசோல் எனும் தடுப்பு மருந்து தெளிக்கப்பட்டது.