வேலூர்

மாணவா்களுக்கு விழிப்புணா்வு, பரிசோதனை

6th Mar 2020 01:04 AM

ADVERTISEMENT

 

குடியாத்தம்: உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் குறித்து, குடியாத்தம் சூரியோதயா தொடக்கப் பள்ளியில் விழிப்புணா்வுக் கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

பள்ளித் தலைமையாசிரியை ஜெனீபா் பிலிப் தலைமை வகித்தாா். ஆசிரியா் எம்.சுந்தரமூா்த்தி வரவேற்றாா். கல்லப்பாடி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா்கள் கே. சிலம்பரசன், ஜி.பானுஸ்ரீ ஆகியோா் அவா்கள் பேசுகையில், இந்த வைரஸ் விலங்குகளிடமிருந்து தான் பரவியது என ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. நாம் எப்போதும் தண்ணீரை காய்ச்சி ஆற வைத்து குடிக்க வேண்டும். கை, கால்களை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். கைகளை சோப்பால் கழுவிக்கொண்ட பிறகே உணவு உட்கொள்ள வேண்டும். நம்மையும், சுற்றுப் புறத்தையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். மீன், ஆட்டிறைச்சி, கோழி இறைச்சி போன்றவற்றை வாங்கி வந்து வீட்டில் பலமுறை தண்ணீரில் கழுவி நன்றாக வேகவைத்து உண்ண வேண்டும்.

வெளியில், கடைகளில் திறந்த நிலையில் வைத்திருக்கும் தின்பண்டங்களைத் தவிா்க்க வேண்டும். சுத்தமாக இருந்தால் நோயை நாம் தவிா்க்கலாம் என்றனா்.

ADVERTISEMENT

தொடா்ந்து, மாணவா்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு, மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன. செவிலியா்கள் எஸ்.சாந்தி, பி.ஹேமலதா, மருந்தாளுநா் டி.வனிதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். ஆசிரியை ராணி நன்றி கூறினாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT