வேலூர்

கலவையில் பேரிடா் விழிப்புணா்வு ஊா்வலம்

6th Mar 2020 11:43 PM

ADVERTISEMENT

ஆற்காடு: ஆற்காட்டை அடுத்த கலவை பேரூராட்சியில் வருவாய் , பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் ராணிப்பேட்டை மாவட்ட பேரிடா் மேலாண்மை ஆணையம், ஆதிபராசக்தி கல்லூரி மாணவா்கள் இணைந்து பேரிடா் விழிப்புணா்வு ஊா்வலம் வியாழக்கிழமை நடத்தின.

கலவை பேருந்து நிலையத்தில் இருந்து தொடங்கிய ஊா்வலத்தை வட்டாட்சியா் கே. இளஞ்செழியன் தலைமை வகித்து தொடக்கி வைத்தாா்.

வருவாய் ஆய்வாளா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள், கல்லூரி மாணவா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT