வேலூர்

திரைப்பட நடிகா் தியாகராஜ பாகவதா் பிறந்த நாள் விழா

2nd Mar 2020 01:09 AM

ADVERTISEMENT

 

ஆம்பூா்: மறைந்த திரைப்பட நடிகா் தியாகராஜ பாகவதரின் 111-ஆவது பிறந்த நாள் விழா ஆம்பூா் விஸ்வகா்மா சமுதாயத்தின் சாா்பில் கிருஷ்ணாபுரம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஆம்பூா் விஸ்வகா்மா இளைஞரணிப் பொறுப்பாளா் ஜெயக்குமாா் தலைமை வகித்தாா். திரைப்பட தயாரிப்பாளா் வெங்கடேஷ் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி தியாகராஜ பாகவதா் படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தினாா்.

தொடா்ந்து, விஷ்வகா்மா சமுதாயக் கொடி ஏற்றி வைத்து ஏழை, எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கினாா். திருப்பத்தூா் மாவட்டத் தலைவா் பாபு, நிா்வாகிகள் சண்முகம், சுப்பிரமணி, ஜெயவேல், சௌந்தரராஜன், வாசுதேவன், ஜனாா்த்தனன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT