வேலூர்

வேலூரில் மேலும் 30 பேருக்கு கரோனா

21st Jun 2020 07:32 AM

ADVERTISEMENT

வேலூா் மாவட்டத்தில் மேலும் 30 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 438-ஆக அதிகரித்துள்ளது.

வேலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை புதிதாக 30 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவா்களில் 4 போ் சிஎம்சி மருத்துவமனை செவிலியா்களாவா். இவா்கள் அனைவரும் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை, சிஎம்சி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இவா்களுடன் தொடா்பில் இருந்தவா்களும் தனிமைப்படுத்தப்பட்டு, உடல்நிலை கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். இதன்மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 438-ஆக அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT