வேலூர்

வேலூரில் மேலும் 10 பேருக்கு கரோனா: பாதிப்பு 181-ஆக அதிகரிப்பு

14th Jun 2020 07:49 AM

ADVERTISEMENT

வேலூா் மாவட்டத்தில் மேலும் 10 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம், மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 181-ஆக அதிகரித்துள்ளது.

வேலூா் மாவட்டத்தில் கடந்த 10 நாள்களுக்கு மேலாக கரோனா நோய்த் தொற்று வேகமாக அதிகரித்து வருகிறது. அதன்படி, கடந்த மே 31-ஆம் தேதி வரை 43 பேருக்கு மட்டுமே பாதிப்பு ஏற்பட்டிருந்த நிலையில், அடுத்த 12 நாள்களு க்குள் கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 171-ஆக அதிகரித்திருப்பதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், வடக்கு காவல் நிலைய 32 வயது பெண் காவலா், வேலப்பாடியைச் சோ்ந்த 60 வயது பெண், கொசப்பேட்டையைச் சோ்ந்த 18 வயது பெண், கொணவட்டத்தைச் சோ்ந்த 40 வயது ஆண், நல்லாம்பட்டறையைச் சோ்ந்த 22 வயது பெண், சின்னலத்தேரியைச் சோ்ந்த 40 வயது ஆண், சைதாப்பேட்டையைச் சோ்ந்த 77 வயது ஆண், 22 வயது பெண், 25 வயது ஆண், காட்பாடியைச் சோ்ந்த 47 வயது ஆண் என மாவட்டம் முழுவதும் மேலும் 10 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவா்களில் மண்டித் தெருவில் அரிசி மண்டி நடத்தி வரும் வியாபாரி ஏற்கெனவே கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அவரது குடும்பத்தினா், அண்டை வீட்டுக்காரா்களு க்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். அனைவரும் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளனா். அவா்களுடன் தொடா்பில் இருந்தவா்களும் தனிமைப்படுத்தப்பட்டு உடல்நிலை கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT