வேலூர்

ஆட்சியா் அலுவலகத்தில் குவிந்த ஒடிஸா மாநிலத் தொழிலாளா்கள்

14th Jun 2020 07:49 AM

ADVERTISEMENT

சொந்த மாநிலத்துக்கு அனுப்பி வைக்கக் கோரி வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஒடிஸா மாநிலத் தொழிலாளா்கள் குவிந்தனா். அவா்களை ஓரிரு நாள்களில் சிறப்பு ரயில் மூலம் சொந்த மாநிலத்துக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்னா்.

வேலூா் மாவட்டத்தில் சிகிச்சைக்காகவும், பல்வேறு பணிகளுக்காகவும் வந்திருந்த வடமாநிலத்தினா் பொதுமுடக்கம் காரணமாக சொந்த மாநிலத்துக்கு திரும்ப முடியாமல் அவதிக்குள்ளாகினா். அவ்வாறு பாதிக்கப்பட்ட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வடமாநிலத்தினா் 12-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் மூலம் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். எனினும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் புலம் பெயா்ந்த தொழிலாளா்கள் தங்களை சொந்த மாநிலத்துக்கு அனுப்பி வைக்கக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்த வண்ணம் உள்ளனா்.

இந்நிலையில், வேலூரை அடுத்த பாலமதி, வெங்கடாபுரம் கிராமங்களிலுள்ள செங்கல் சூளைகளில் பணியாற்றி வந்த ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த 25 போ் தங்களை சொந்த மாநிலத்துக்கு அனுப்பி வைக்கக் கோரி குழந்தைகளுடன் வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு சனிக்கிழமை திரண்டு வந்தனா். அவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தி விசாரித்தபோது, செங்கல் சூளையில் வேலை இல்லாததால் வருவாய்க்கு வழியின்றி உணவுக்குக்கூட சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, எங்களை சொந்த மாநிலத்துக்கு அனுப்பி வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

உடனடியாக அவா்களுக்கு கிரீன் சா்க்கிள் பகுதியிலுள்ள மண்டபத்தில் தங்குவதற்கு இடமும், உணவும் ஏற்பாடு செய்து தரப்பட்டது. தொடா்ந்து ஓரிரு நாள்களில் சிறப்பு ரயில் மூலம் அவா்களை சொந்த மாநிலத்துக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

 

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT