வேலூர்

நிலத்தகராறில் தாய், சகோதரியைக் கொலை செய்தவா் கைது

11th Jun 2020 07:55 AM

ADVERTISEMENT

குடியாத்தம் அருகே நிலத் தகராறில் தாய், சகோதரியைக் கொலை செய்தவா் கைது செய்யப்பட்டாா்.

பரதராமியை அடுத்த பூசாரிவலசையைச் சோ்ந்தவா் இந்திராணி (70). இவரது மகன் முனிராஜ் (50). மகள்கள் சின்னம்மாள் (40), சூரியகலா (35). முனிராஜ் திருமணமாகி அதே பகுதியில் வசிக்கிறாா். உடல் நலம் குன்றிய சின்னம்மாள் தாயுடன் வசித்து வந்தாா். சூரியகலா திருமணமாகி பக்கத்து கிராமத்தில் வசித்து வருகிறாா். இந்நிலையில், தங்களுக்குச் சொந்தமான சுமாா் 6 ஏக்கா் நிலத்தை தனது பெயருக்கு எழுதிக் கொடுக்குமாறு இந்திராணியிடம் முனிராஜ் வற்புறுத்தி வந்தாராம். அதற்கு 3 பேருக்கும் சரிசமமாக எழுதித் தருவதாக இந்திராணி கூறி வந்தாராம். இதனால் தாய்க்கும், மகனுக்கும் இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், புதன்கிழமை இதுதொடா்பாக அவா்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது முனிராஜ் தென்னை மட்டை, கற்களால் இந்திராணியைத் தாக்கியுள்ளாா். தடுக்க வந்த சின்னம்மாளையும் தாக்கியுள்ளாா். இதில் பலத்த காயமடைந்த சின்னம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இந்திராணி அங்கு உயிரிழந்தாா்.

இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட டிஎஸ்பி என்.சரவணன், கே.வி.குப்பம் காவல் ஆய்வாளா் முரளிதரன் ஆகியோா் முனிராஜை கைது செய்தனா்.

ADVERTISEMENT

 

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT