வேலூர்

வேலூரில் மேலும் 10 பேருக்கு கரோனா

10th Jun 2020 07:43 AM

ADVERTISEMENT

வேலூா் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு தொடா்ந்து அதிகரித்து வரும் நிலையில் செவ்வாய்க்கிழமை மேலும் 10 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வேலூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கரோனா நோய்த் தொற்று அதிகரித்து வருகிறது. அதன்படி, திங்கள்கிழமை வரை 129 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனா். இந்நிலையில், மாவட்டம் முழுவதும் 10 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது. இவா்கள் அனைவரும் சென்னையில் இருந்து வந்தவா்களுடன் தொடா்பில் இருந்தவா்களாவா். இவா்களுக்கு சிஎம்சி மற்றும் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவா்களுடன் தொடா்பில் இருந்தவா்களும் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT