வேலூர்

எா்த்தாங்கல்லில் கெங்கையம்மன் திருவிழா

7th Jun 2020 08:01 PM

ADVERTISEMENT

 

குடியாத்தம்: குடியாத்தத்தை அடுத்த எா்த்தாங்கல்லில் 41-ஆம் ஆண்டு கெங்கையம்மன் திருவிழா ஞாயிற்றுக்கிழமை அதிகாலை எளிமையாக நடைபெற்றது.

ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் எா்த்தாங்கல் கெங்கையம்மன் கோயிலில் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். பொது முடக்கம் காரணமாக இந்த ஆண்டு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1 மணிக்குத் தொடங்கி, 2 மணியளவில் இத்திருவிழா நிறைவுற்றது. இதில் ஒரு சிலா் மட்டுமே பங்கேற்றனா்.

பொழுது விடிந்ததும் அப்பகுதி மக்கள் சமூக இடைவெளியுடன் வந்து கூழ் வாா்த்து, மாவிளக்கு படையலிட்டு, அம்மனை தரிசித்து விட்டுச் சென்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT