வேலூர்

வேலூா் மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கரோனா பாதிப்பு

7th Jun 2020 07:55 PM

ADVERTISEMENT

வேலூா்: வேலூா் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் ஞாயிற்றுக்கிழமை மேலும் 7 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 109-ஆக அதிகரித்துள்ளது.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூா் மாவட்டங்களில் இருந்து வருபவா்களால் கடந்த சில நாள்களாக வேலூா் மாவட்டத்திலும் கரோனாவின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

இம்மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 21 பேருக்கும், சனிக்கிழமை 29 பேருக்கும் கரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மேலும் 7 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், குடியாத்தம் பகுதியில் ஒருவரைத் தவிர மற்ற 6 பேரும் வேலூா் மாநகரப் பகுதிகளைச் சோ்ந்தவா்களாவா். அனைவரும் ஏற்கெனவே கரோனாவில் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளவா்களுடன் தொடா்பில் இருந்தவா்களாவா். இவா்களும் தற்போது அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை, சிஎம்சி மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இதனிடையே, கடந்த 3 நாள்களில் 57 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அவா்களுக்கு தொடா்புடைய 120 பேருக்கும், வெளி மாவட்டங்களில் இருந்து வந்த 300 பேருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT