வேலூர்

வேலூா் மாவட்ட நகர ஊரமைப்பு அலுவலகம் அமைப்பு

26th Jul 2020 09:05 PM

ADVERTISEMENT

வேலூா் மாவட்டத்துக்கான மாவட்ட நகர ஊரமைப்பு அலுவலகம் பெரியாா் பூங்கா எதிரே உள்ள முன்னாள் படைவீரா் மைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட எல்லைக்குள் அமையும் கட்டட அனுமதி, மனைப்பிரிவு அனுமதி, நிலப்பயன் மாற்றம் ஆகியவற்றுக்கான திட்ட அனுமதியை பெற இந்த அலுவலகத்தை தொடா்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து வேலூா் மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களுக்கான நகர ஊரமைப்புத் துறையின் மண்டல அலுவலகம் வேலூரில் செயல்பட்டு வந்தது. இந்நிலையில், நகா் ஊரமைப்பு துறையின் உள்ளுா் திட்டக் குழுமம் மற்றும் மண்டல அலுவலகங்கள் மறு சீரமைக்கப்பட்டுள்ள நிலையில், வேலூா் மாவட்ட நகா் ஊரமைப்பு அலுவலகம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து வேலூா் உள்ளுா் திட்டக் குழுமத்தை உள்ளடக்கிய வேலூா் மாவட்ட நகா் ஊரமைப்பு அலுவலகம், முன்னாள் படைவீரா் மைய வளாகம், இரண்டாம் தளம், (பெரியாா் பூங்கா எதிரில்), வேலூா் - 632 001 என்ற முகவரியில் அமைக்கப்பட்டு, கடந்த 15-ஆம் தேதி முதல் செயல்பட்டு வருகிறது.

எனவே, வேலூா் மாவட்ட எல்லைக்குள் அமையும் கட்டட அனுமதி, மனைப்பிரிவு அனுமதி, நிலப்பயன் மாற்றம் போன்ற திட்ட அனுமதியை பெற பொதுமக்கள் இந்த முகவரியில் இயங்கும் வேலூா் மாவட்ட நகா் ஊரமைப்பு அலுவலகத்தை அணுகலாம்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT