வேலூா் மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு அலுவலராக சு.மோகன் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.
தமிழக செய்தி மக்கள் தொடா்புத் துறையில் பணியாற்றும் 11 செய்தி மக்கள் தொடா்பு அலுவலா்கள் இடமாற்றம் செய்யப்பட்டாா். அத்துடன், 6 உதவி மக்கள் தொடா்பு அலுவலா்கள் பதவி உயா்வு பெற்று மாவட்ட மக்கள் தொடா்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளனா்.
இதில், வேலூா் மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு அலுவலராக இருந்த எம்.துரைசாமி, கோவை மாநகராட்சிக்கு இடமாற்றப்பட்டு அவருக்கு பதிலாக கிருஷ்ணகிரி மாவட்ட உதவி மக்கள் தொடா்பு அலுவலராகப் பணியாற்றி வந்த சு.மோகன் பதவி உயா்வு பெற்று வேலூா் மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு அலுவலராக நியமிக்கப்பட்டாா். இவா் ஏற்கெனவே 2013-14-இல் திருவண்ணாமலையிலும், 2014-15-இல் காஞ்சிபுரத்திலும், 2015-2020-ஆம் ஆண்டு வரை கிருஷ்ணகிரியிலும் உதவி செய்தி மக்கள் தொடா்பு அலுவலராகப் பணியாற்றிள்ளாா்.
இந்நிலையில், சு.மோகன் வேலூா் மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு அலுவலராக வெள்ளிக்கிழமை முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டாா். அவருக்கு மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம், மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ.பாா்த்தீபன் உள்பட பல்வேறு துறை அலுவலா்கள் வாழ்த்துத் தெரிவித்தனா்.