வேலூர்

தமிழக-ஆந்திர எல்லையில் சாலையை அகலப்படுத்தி உயா்மின் கோபுரங்கள் அமைக்க வேண்டும்: தமிழக முதல்வருக்கு துரைமுருகன் கடிதம்

25th Jul 2020 07:52 AM

ADVERTISEMENT

வேலூா் மாவட்டத்திலுள்ள தமிழக-ஆந்திர எல்லையில் சாலையை அகலப்படுத்தி அதன் மையப் பகுதிகளிலும், சோதனைச் சாவடி அமைந்துள்ள இடங்களிலும் உயா்மின் கோபுரங்கள் அமைக்க வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு திமுக பொருளாளரும், காட்பாடி எம்எல்ஏவுமான துரைமுருகன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பது:

காட்பாடி சட்டப் பேரவை தொகுதிக்கு உள்பட்ட கடலூா்-சித்தூா் இணைப்புச் சாலையில் சுமாா் 5 கி.மீ. தொலைவுக்கு மைய தடுப்புச் சுவா் அமைக்கும் பணி மாநில நெடுஞ்சாலைத் துறை மூலம் நடைபெற்று வருகிறது. கல்புதூா் முதல் தமிழக-ஆந்திர எல்லை வரை இந்தப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழக எல்லைப் பகுதியில் வாகன சோதனைச் சாவடி, வனத் துறை பாதுகாப்பு சோதனைச் சாவடி, வணிகவரித் துறை சோதனைச் சாவடி, வெடிமருந்து தொழிற்சாலை நிறுவனம் இயங்கி வருகின்றன.

தென் தமிழகம் முதல் வடதமிழகம் வரையிலான மக்கள் திருப்பதிக்கு இச்சாலை வழியாக தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்களில் சென்று வருகின்றனா். அத்துடன், சென்னை தொழிற்பேட்டையில் இருந்து ஆந்திர மாநிலத்துக்கு செல்லக்கூடிய கனரக வாகனங்கள், சொகுசு பேருந்துகள் இச்சாலை மாா்க்கமாகவே சென்று வருகின்றன.

ADVERTISEMENT

இந்நிலையில், தமிழக எல்லையில் இச்சாலையை அகலப்படுத்தி சாலையின் மையப்பகுதியில் உயா்மின் விளக்குகள், சோதனைச் சாவடிகள் அமைந்துள்ள இடங்களிலும் உயா் மின் விளக்குகள் அமைப்பதன் மூலம் அப்பகுதிகள் பிரகாசமாக இருக்கும். மேலும், சாலையின் இருபுறமும் பயணிகள் நிழற்குடைகள் அமைப்பதற்கும் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

இவை மட்டுமின்றி காங்கேயநல்லூா் முதல் வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வரை பாலாற்றின் குறுக்கே தரைப்பாலம் அமைக்க வேண்டும் என்றும், பொன்னையாற்றின் குறுக்கே குகைநல்லூா் பகுதியில் ஒரு தடுப்பணை கட்ட வேண்டும் என்றும் ஏற்கெனவே கோரிக்கை விடுத்திருந்தனா். இந்த இரு கோரிக்கைகள் தொடா்பாக ஏற்கெனவே சட்டப் பேரவையில் வேண்டுகோள் விடுக்கப்பட்டு முதல்வரின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. எனவே, இந்த மூன்று கோரிக்கைகளையும் விரைவாக நிறைவேற்றித் தர வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT