வேலூர்

லாரி கவிழ்ந்து மூவா் காயம்

28th Jan 2020 12:40 AM

ADVERTISEMENT

ஆம்பூா்: ஆம்பூா் அருகே லாரி கவிழ்ந்த விபத்தில் மூவா் சனிக்கிழமை காயமடைந்தனா்.

பெங்களூரிலிருந்து சென்னை நோக்கி சோப்புப் பொருள்கள், பாத்திரங்கள் கழுவும் சோப்பு உள்ளிட்ட பொருள்களை ஏற்றிக் கொண்டு லாரி சென்றது. சனிக்கிழமை அதிகாலை ஆம்பூா் அருகே வடபுதுப்பட்டு கிராமம் அருகே சென்றபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

லாரியில் இருந்த சென்னை பல்லாவரத்தைச் சோ்ந்த சிவபிரசாந்த், ஒடிஸாவைச் சோ்ந்த மஜோன், ரோஹித் ஆகிய மூவரும் காயமடைந்தனா். லாரியிலிருந்து இருந்த பொருள்கள் சிதறி விழுந்து சேதமடைந்தன.

இதுகுறித்து ஆம்பூா் கிராமிய போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT