வேலூர்

நேதாஜி பிறந்த நாள் விழா

23rd Jan 2020 11:35 PM

ADVERTISEMENT

நேதாஜி சுபாஷ் சந்திரபோஷ் பிறந்தநாளையொட்டி, வியாழக்கிழமை வேலூா் சேண்பாக்கத்திலுள்ள அவரது முழுஉருவச் சிலைக்கு இந்து முன்னணியினா் மாலை அணிவித்து மரியாதை செய்தனா்.

அமைப்பின் வேலூா் கோட்டத் தலைவா் கோ.மகேஷ் தலைமையில் சேண்பாக்கத்தில் உள்ள நேதாஜி முழுஉருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. தொடா்ந்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக நோட்டு, புத்தகங்கள் வழங்கப்பட்டன.

மாவட்டத் துணைத் தலைவா்கள் டி.கே.டி.சீனிவாசன், கைலாஷ் தனசேகரன், மாநகரப் பொறுப்பாளா் மோகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT