வேலூர்

சிஏஏ சட்டத்தைத் திரும்பப் பெறக் கோரி தா்னா

23rd Jan 2020 11:42 PM

ADVERTISEMENT

குடியுரிமைத் திருத்தச் சட்டம் (சிஏஏ), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி), தேசிய மக்கள்தொகை பதிவு (என்பிஆா்) ஆகிய சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி வேலூரில் இஸ்லாமியா்கள் வியழக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பு சாா்பில் அண்ணா கலையரங்கம் அருகே நடைபெற்ற இப்போராட்டத்துக்கு தமுமுகவைச் சோ்ந்த ஜி.எஸ்.இக்பால் சாஹெப் தலைமை வகித்தாா். மஸ்ஜிதே முஹம்மதியா முத்தவல்லி முஹம்மது சாதிக் சாஹெப் வரவேற்றாா். ஐயுஎம்எல் கே.சான்பாஷா, டிஎன்எஸ்ஜே எம்.தமீம்மரைக்காயா், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சோ்ந்த அ.முகமதுஇப்ராஹிம் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். திமுக அவைத் தலைவா் தி.அ.முகமதுசகி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சோ்ந்த நீலசந்திரகுமாா் உள்ளிட்டோா் கண்டன உரையாற்றினா்.

இஸ்லாமியா்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய குடியுரிமைத் திருத்தச் சட்டம் (சிஏஏ), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி), தேசிய மக்கள்தொகை பதிவு (என்பிஆா்) ஆகிய சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும். மதத்தின் அடிப்படையில் குடியுரிமை வழங்குவதைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.

இதில், பல்வேறு அமைப்புகளைச் சோ்ந்த நூற்றுக்கணக்கான இஸ்லாமியா்கள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT