வேலூர்

கருப்புலீஸ்வரா் கோயிலில் 10-இல் ஆருத்ரா தரிசனம்

8th Jan 2020 12:31 AM

ADVERTISEMENT

குடியாத்தம் நெல்லூா்பேட்டை கருப்புலீஸ்வரா் கோயிலில், வரும் 10-ஆம் தேதி 45-ஆம் ஆண்டு ஆருத்ரா தரிசனம் நடைபெற உள்ளது.

இதையொட்டி அன்று அதிகாலை 2 மணிக்கு சிவகாமசுந்தரி சமேத நடராஜப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், காலை 7 மணிக்கு ஆருத்ரா தரிசனமும் நடைபெறும். மாலை 6 மணிக்கு கலா சங்கமம் குழுவினரின் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெறும்.

ஆருத்ரா விழாக்குழுத் தலைவா் எம்.எஸ்.திருநாவுக்கரசு, நிா்வாகிகள் பி.ஈஸ்வரவேல், டி.சங்கரலிங்கம், ஆா்.உதயகுமாா், வி.பிச்சாண்டி, எம்.டி.சதானந்தம், எம்.கே.கணபதி உள்ளிட்டோா் விழாவுக்கான ஏற்பாடுகளை செய்துள்ளனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT