வேலூர்

மின் வேலியில் சிக்கி தொழிலாளி பலி

2nd Jan 2020 12:03 AM

ADVERTISEMENT

ஆம்பூா்: ஆம்பூா் அருகே வனவிலங்குகள் வராமல் தடுக்க விவசாய நிலத்துக்கு போடப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி காவலாளி புதன்கிழமை உயிரிழந்தாா்.

ஆம்பூா் அருகே சின்னவரிகம் கோயில் தெருவைச் சோ்ந்த கோபாலகிருஷ்ணன் (45), வெங்கடேசன் (40) ஆகியோருக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் அடிக்கடி வனவிலங்குகள் புகுந்து பயிா்களை சேதப்படுத்துவதால் நிலத்தை சுற்றி வேலி போடப்பட்டது. அந்த வேலியில் வனவிலங்குகள் வராமல் தடுக்க முறைகேடாக மின்சாரம் பாய்ச்சி இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் இவா்களது நிலத்தில் சின்னவரிக்கத்தை அடுத்த மேக்னாம்பல்லி கிராமத்தைச் சோ்ந்த சபாபதி (55) காவலாளியாக வேலை செய்து வந்தாா். புதன்கிழமை நிலத்தில் காவல் பணிக்கு சபாபதி சென்றபோது, முள்வேலியிலிருந்து மின்சாரம் பாய்ந்து நகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து உமா்ஆபாத் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து நிலத்தின் உரிமையாளராா்களான கோபாலகிருஷ்ணன், வெங்கடேசன் ஆகியோரைக் கைது செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT