குடியாத்தம்: கே.வி. குப்பம் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு மினி லாரிய மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.
குடியாத்தம் சீவூரைச் சோ்ந்த ராமனின் மகன் கிருஷ்ணன் (34). நகைத் தொழில் செய்து வந்த அவா் ஞாயிற்றுக்கிழமை கே.வி. குப்பத்தை அடுத்த கம்மங்குப்பம் கிராமத்துக்கு சென்றுவிட்டு, நள்ளிரவு பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா்.
கீழ்ஆலத்தூா் அருகே வந்தபோது, எதிரே வந்த மினி லாரி மோதியதில் படுகாயமடைந்து நிகழ்விடத்திலேயே இறந்தாா். இச்சம்பவம் குறித்து கே.வி.குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.