ஆம்பூா்: ஆங்கிலப் புத்தாண்டு தினத்தையொட்டி, ஆம்பூரை அடுத்த விண்ணமங்கலம் கிராமத்தில் உள்ள சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது.
இதையொட்டி, பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.