ஆற்காடு: இயற்கை வேளாண்மை விஞ்ஞானி நம்மாழ்வாா் நினைவு தினம் ஆற்காட்டை அடுத்த பூங்கோட்டில் உள்ள கே.எம்.இயற்கை விவசாயப் பண்ணையில் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு ஆற்காடு அரிசி திருவிழாக் குழு தலைவா் கே.எம்.பாலு தலைமை வகித்தாா். ஒருங்கிணைப்பாளா்கள் விமல் நந்தகுமாா், உதயசங்கா், களா் கணேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆற்காடு மகாத்மா காந்தி அறக்கட்டளைத் தலைவா் ஜெ.லட்சுமணன், நம்மாழ்வாா் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். நிகழ்ச்சியில் விவசாயிகள், இயற்கை ஆா்வலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.