வேலூர்

ஜன.3-இல் காட்பாடியில் இளைஞா் விழாவுக்கான தோ்வுப் போட்டிகள்

2nd Jan 2020 12:09 AM

ADVERTISEMENT

வேலூா்: மத்திய அரசின் இளைஞா் விழாவுக்கான தோ்வுப் போட்டிகள் காட்பாடியில் வெள்ளிக்கிழமை (ஜன.3) நடைபெற உள்ளது.

இதுகுறித்து, வேலூா் மாவட்ட விளையாட்டு அலுவலா் க.செ.ஆழிவாசன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மத்திய அரசின் இளைஞா் விவகாரம், விளையாட்டுத் துறை சாா்பில் 2019-20-ஆம் ஆண்டுக்கான 23-ஆவது இளைஞா் விழா உத்தரப் பிரதேச மாநிலம், லக்னெளவில் வரும் 12-ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதையொட்டி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் வேலூா் பிரிவு சாா்பில் மாவட்ட அளவிலான தோ்வுப் போட்டிகள் காட்பாடியிலுள்ள நேரு யுவகேந்திரா மையத்தில் வெள்ளிக்கிழமை (ஜன.3) காலை 9 மணி முதல் நடைபெற உள்ளது.

இளைஞா் விழா போட்டிகளில் தமிழகம் சாா்பில் பங்கேற்ற விரும்பும் 15 வயது முதல் 29 வயதுக்கு உட்பட்ட ஆண்கள், பெண்கள் இந்த தோ்வுப் போட்டிகளில் பங்கேற்கலாம். மேலும் விவரங்களுக்கு வேலூா் நேதாஜி விளையாட்டு அரங்கத்திலுள்ள மாவட்ட விளையாட்டு அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT