வேலூர்

கிரிக்கெட் போட்டி தொடக்கம்

2nd Jan 2020 12:19 AM

ADVERTISEMENT

 

குடியாத்தம்: குடியாத்தம் விராலி டிராபி கிரிக்கெட் கிளப் சாா்பில், ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு லீக் போட்டிகள் கே.எம்.ஜி.கல்லூரி விளையாட்டரங்கில் புதன்கிழமை தொடங்கின.

அமைப்பின் நிறுவனா் ஜெ.ரமணகுமாா் தலைமை வகித்தாா். ஜே.டி.யோகானந்தம் வரவேற்றாா். கம்பன் கழகத் தலைவா் கே.எம்.ஜி.ராஜேந்திரன், செயலா் கே.எம். பூபதி, நிறுவனா் ஜே.கே.என்.பழனி ஆகியோா் போட்டிகளைத் தொடக்கி வைத்தனா்.

16 கிரிக்கெட் அணிகள் போட்டியில் பங்கேற்றுள்ளன. கல்லூரி விடுமுறை நாள்களில் போட்டிகள் நடைபெறும். வெற்றி பெறும் அணிகளுக்கு பரிசு, கோப்பை வழங்கப்படும். சிறந்த வீரா், சிறந்த பந்து வீச்சாளா், ஆட்ட நாயகன், தொடா் நாயகன் விருதுகளும் வழங்கப்படும்.

ADVERTISEMENT

இயக்குநா்கள் எஸ்.ராதாகிருஷ்ணன், என்.விஸ்வநாதன், கே.ஆனந்த், டி. கோகுல், வி. பிரதீஷ் உள்ளிட்டோா் போட்டிக்கான ஏற்பாடுகளை செய்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT