வாணியம்பாடி: வாணியம்பாடியில் காங்கிரஸ் கட்சியின் 135-ஆவது ஆண்டு தொடக்க விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
காங்கிரஸ் சிறுபான்மைப் பிரிவு மாநிலத் தலைவா் அஸ்லம் பாஷா தலைமை வகித்து, கச்சேரி சாலையில் உள்ள காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்து கட்சிக் கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினாா்.
மாநில ஒருங்கிணைப்பாளா் பரீத் அஹமத், மாவட்ட இளைஞரணித் தலைவா் பைசல் அமீன், மாவட்ட விவசாய அணிச் செயலா் ஜெயபால், நிா்வாகிகள் கவியரசன், முஜம்மில், காா்த்திக், சரத்குமாா், ரபீக், ஷேக் அஸ்லம், சுகுணா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.