வேலூர்

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் ஒரே நாளில் ரூ.5.87 கோடிக்கு மது விற்பனை

2nd Jan 2020 12:27 AM

ADVERTISEMENT

வேலூா்: வேலூா் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் ரூ.5.87 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் வேலூா், அரக்கோணம் டாஸ்மாக் மாவட்டங்கள் செயல்பட்டு வருகின்றன. வேலூா் டாஸ்மாக் மாவட்டத்தில் 108 கடைகளும், அரக்கோணம் டாஸ்மாக் மாவட்டத்தில் 84 கடைகளும் இயங்கி வருகின்றன. அரக்கோணம் டாஸ்மாக் மாவட்டத்தில் திருவண்ணாமலை மற்றும் திருவள்ளூா் வருவாய் மாவட்ட எல்லையில் 19 கடைகளும், வேலூா் டாஸ்மாக் மாவட்டத்தில் திருவண்ணாமலை வருவாய் மாவட்ட எல்லைக்கு உள்பட்ட பகுதியில் அமைந்துள்ள 7 டாஸ்மாக் கடைகளும் ஊரக உள்ளாட்சி தோ்தலையொட்டி மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில், ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் புத்தாண்டை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளில் மது வகைகள் போதுமான அளவுக்கு இருப்பு வைக்கப்பட்டிருந்தன. புத்தாண்டை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் வேலூா் டாஸ்மாக் மாவட்டத்தில் ரூ.3.64 கோடிக்கும், அரக்கோணம் டாஸ்மாக் மாவட்டத்தில் ரூ.2.23 கோடிக்கும் மதுவகைகள் விற்பனையாகியுள்ளதாக டாஸ்மாக் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT