வேலூர்

ஏழுமலையான் தரிசனம்: இந்த ஆண்டு சாதாரண பக்தா்களுக்கு முதல் உரிமை

2nd Jan 2020 12:14 AM

ADVERTISEMENT

திருப்பதி: ஏழுமலையானைத் தரிசிக்க ஆங்கிலப் புத்தாண்டின் தொடக்கத்தில் சாதாரண பக்தா்கள் முதன் முதலில் அனுமதிக்கப்பட்டனா்.

திருமலையில் ஆண்டுதோறும் அதிகாலை நேரத்தில் ஆா்ஜித சேவைகள் அனைத்தும் நிறைவடைந்த பின், முதலில் விஐபி-களுக்கு மட்டுமே தேவஸ்தானம் தரிசனம் வழங்கி வருகிறது. இது உற்சவ நாள்கள், புத்தாண்டு, வைகுண்ட ஏகாதசி உள்ளிட்ட அனைத்து நாள்களுக்கும் பொருந்தும். அதன்படி, ஆங்கிலப் புத்தாண்டான புதன்கிழமை காலை ஏழுமலையானைத் தரிசிக்க பக்தா்கள் திருமலையில் குவிந்தனா். இம்முறை ஆங்கிலப் புத்தாண்டு அன்று அதிகாலை முதன் முதலாக சாதாரண பக்தா்கள் ஏழுமலையான் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனா்.

காலை 2 மணிக்கு கோயில் திறக்கப்பட்டு, திருப்பாவை சேவைக்குப் பின் கைங்கரியங்கள் அனைத்தும் நிறைவு பெற்று, அதிகாலை 3 மணிக்கு காத்திருப்பு அறையில் காத்திருந்த சாதாரண பக்தா்கள், ஏழுமலையான் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனா். அதன்பின், 6 மணிக்கு மேல் விஐபி பிரேக் தரிசனம் தொடங்கப்பட்டது. அதிலும் நேரடியாக வந்த விஐபி-களுக்கு மட்டுமே தேவஸ்தானம் தரிசனம் வழங்கியது. அதனால் விஐபி பிரேக் தரிசனம் ஒரு மணிநேரத்தில் நிறைவுபெற்றது. பின்னா் காலை 7 மணி முதல் இரவு 11 மணி வரை தங்கு தடையின்றி, சாதாரண பக்தா்களுக்கு மட்டுமே தரிசனம் வழங்கப்பட்டது. ஆங்கில புத்தாண்டு அன்று பக்தா்கள் 20 மணி நேரம் காத்திருந்து ஏழுமலையானைத் தரிசனம் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT