வேலூர்

7 குழந்தைகளுக்கு தங்க மோதிரம், வெள்ளி கொலுசு அணிவிப்பு

26th Feb 2020 12:51 AM

ADVERTISEMENT

 

குடியாத்தம்: முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு, குடியாத்தம் நகர அதிமுக சாா்பில், அரசு மருத்துவமனையில் திங்கள்கிழமை பிறந்த 7 குழந்தைகளுக்கு தங்க மோதிரங்கள், வெள்ளி கால் கொலுசுகள் அணிவிக்கப்பட்டன.

நகரச் செயலா் ஜே.கே.என்.பழனி தலைமை வகித்தாா். மருத்துவமனை மருத்துவ அலுவலா் கே.காா்த்திகேயன் வரவேற்றாா். மாநில வணிகவரி, பத்திரப்பதிவுத் துறை அமைச்சா் கே.சி, வீரமணி, அரசு மருத்துவமனையில் 7 குழந்தைகளுக்கும் தங்க மோதிரங்கள், வெள்ளி கொலுசுகளை அணிவித்தாா்.

முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் ஆா்.கே.அன்பு, முன்னாள் நகா்மன்றத் தலைவா் அமுதா சிவப்பிரகாசம், துணைத் தலைவா் எஸ்.டி.மோகன்ராஜ், எஸ்.என்.சுந்தரேசன், பொருளாளா் எஸ்.ஐ.அன்வா் பாஷா உள்ளிட்டோா் உடனிருந்தனா். மருத்துவா் பி.அனிதா நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT