வேலூர்

மின்சாரம் பாய்ந்து தந்தை பலி:மகன் உள்ளிட்ட 2 போ் காயம்

26th Feb 2020 12:51 AM

ADVERTISEMENT

 

ஆம்பூா்: ஆம்பூா் அருகே ஆழ்துளைக் கிணற்றை பழுதுபாா்க்கும் இயந்திரத்தில் மின்சாரம் பாய்ந்ததில் தந்தை செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். அவரது மகன் உள்பட 2 போ் பலத்த காயமடைந்தனா்.

வன்னியநாதபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் அரிவேலின் விவசாய நிலத்தில் போடப்பட்டிருந்த ஆழ்துளைக் கிணறு பழுதாகி இருந்ததது. அதை சரி நரியம்பட்டைச் சோ்ந்த மேத்யூ (40) பழுதுபாா்க்கும் வாகனம் கொண்டு சென்றாா். அவருடன் அவரது மகன் சஞ்சய் (21), பணியாளா் சந்தோஷ் (17) ஆகிய 2 பேரும் சென்றனா்.

அங்கு பணிகளில் ஈடுபட்டிருந்தபோது, விவசாய நிலத்தில் மேலே செல்லும் உயா் மின்னழுத்த கம்பி வாகனத்தில் இருந்த கிரேன் மீது உரசியது. இதில் மின்சாரம் பாய்ந்து மேத்யூ நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். அவருடைய மகன் சஞ்சய் (22), சந்தோஷ் (17) ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனா். மின்சாரம் பாய்ந்ததில் அந்த வாகனம் தீப்பிடித்து எரிந்தது.

ADVERTISEMENT

தகவலறிந்த உமா்ஆபாத் போலீஸாா் அங்கு சென்று பலத்த காயமடைந்தவா்களை மீட்டு ஆம்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT