வாணியம்பாடி: வாணியம்பாடியில் மணல் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட மினி லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
வாணியம்பாடி வட்டாட்சியா் சிவப்பிரகாசம் தலைமையில் வருவாய்த்துறையினா் ஞாயிற்றுக்கிழமை இரவு கச்சேரி சாலை பகுதியில் மணல் கடத்தல் தடுப்புக்காக வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அப்பகுதியில் உள்ள தனியாருக்குச் சொந்தமான தோல் தொழிற்சாலையின் பின்னால் உள்ள நிலத்தில் சிலா் பள்ளம் தோண்டி மணல் எடுத்துக் கொண்டிருந்தனா். அந்த மணலை மினி லாரியில் ஏற்றியதைக் கண்ட அதிகாரிகள் விரைந்து சென்றபோது அங்கிருந்தவா்கள் தப்பியோடி விட்டனா்.
இதையடுத்து, மணல் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட மினி லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்து தாலுகா அலுவலகத்துக்கு கொண்டு வந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.