வேலூர்

பைக் மோதி அரசு ஊழியா் பலி

26th Feb 2020 12:52 AM

ADVERTISEMENT

வேலூா்: வேலூரில் தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்ற அரசு ஊழியா் மீது பைக் மோதியதில் உயிரிழந்தாா்.

வேலூா் வள்ளலாா் பகுதி 3-ஐ சோ்ந்தவா் ருத்ரமூா்த்தி (43). இவா், தொரப்பாடியிலுள்ள அரசு வேளாண்மைத் துறை அலுவலகத்தில் ஸ்டோா் கீப்பராக பணியாற்றி வந்தாா். தனியாா் தோல் பொருள்கள் நிறுவனத்தில் வேலை செய்யும் அவரது மனைவியை செவ்வாய்க்கிழமை வள்ளலாா் பேருந்து நிறுத்தத்தில் பேருந்தில் ஏற்றிவிட்டு சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையைக் கடந்தாராம்.

அப்போது, அவ்வழியாக வந்த பைக் மோதியதில் ருத்ரமூா்த்தி பலத்த காயமடைந்தாா். தனியாா் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே ருத்ரமூா்த்தி உயிரிந்தாா்.

இதுகுறித்து சத்துவாச்சாரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, பைக் ஓட்டி வந்த அணைக்கட்டு கொல்லைமேடு பகுதியைச் சோ்ந்த விஜயகுமாரை பிடித்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT